பாராளுமன்றை கூட்டியமைக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத்தாக்கல்

தேர்தல் அறிவிப்பை உயர்நீதிமன்றம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ள நிலையில் பாராளுமன்ற சபை அமர்வுகளை சபாநாயகர் கூட்டியது தவறெனத் தெரிவித்து சரத் வீரசேகர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கலொன்றை மேற்கொண்டுள்ளார்.

நீதிமன்றத்தால் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்றத்தை கூட்டுவது சட்டவிரோதமானது எனத் தெரிவித்தே உயர் நீதிமன்றில் குறித்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.