பாரளுமன்ற சொத்தை சேதப்படுத்தியோர் மீது சட்ட நடவடிக்கை அவசியம்”

ஜனநாயக நாடொன்றின் பாராளுமன்றத்தில் அதன் உறுப்பினர்கள் செயற்பட்ட விதம் கவலையளிக்கின்றது. பாராளுமன்றத்தில் சபாநாயகரையும், ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களையும் தாக்கியமை மற்றும் அச்சுறுத்தியமை, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றங்களுடன் தொடர்புடைய உறுப்பினர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐக்கிய இடதுசாரி முன்னணி வலியுறுத்தியுள்ளது.

 

பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடு மற்றும் நாட்டின் அரசியல் சிக்கல்நிலை என்பன தொடர்பில் ஐக்கிய இடதுசாரி முன்னணியினால் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அதன் செயலாளர் லால் விஜேநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.