நிதி­யு­த­வி­களை நிறுத்­தி­யது- பன்­னாட்டு நாணய நிதி­யம்!!

இலங்­கை­யில் அர­சி­யல் நெருக்­கடி நீடிப்­ப­தால் இலங்­கைக்கு வழங்­கும் நிதியை நிறுத்தி வைக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது என்று பன்­னாட்டு நாணய நிதி­யம் அறி­வித்­துள்­ளது.

பன்­னாட்டு நாணய நிதி­யம், இலங்­கை­யு­டன் மேற்­கொண்டு வரும் திட்­டங்­களை நிறுத்தி வைத்­துள்­ளது என்று நிதி­யத்­தின் பேச்­சா­ளர் கெரி ரைஸ் தெரி­வித்­துள்­ளார்.

இலங்­கை­யில் ஏற்­பட்­டுள்ள அர­சி­யல் நெருக்­க­டி­யான நிலைமை முடி­வ­டைந்து விட்­டது என்­பது தெளி­வா­கும் வரை திட்­டங்­கள் நிறுத்தி வைக்­கப்­ப­டும் என­வும் அவர் கூறி­யுள்­ளார்.

இலங்­கை­யில் அதி­க­ரித்து வரும் நிலை­மை­கள் கண்­கா­ணிக்­கப்­ப­டு­கின்­றது என்று பன்­னாட்டு நாணய நிதி­யம் தெரி­வித்­தி­ருந்­தது.

பன்­னாட்டு நாணய நிதி­யம் 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் திகதி இலங்­கைக்கு 1.5 பில்­லி­யன் டொலரை வழங்­கு­வ­தற்­காக அனு­ம­தியை வழங்­கி­ய­து­டன், அதில் தவணை கொடுப்­ப­னவை வழங்க ஏற்­பா­டு­களை செய்­தி­ருந்­தது.

முக்­கி­ய­மான பொரு­ளா­தார சீர்த்­தி­ருத்­தங்­களை செய்ய வேண்­டும் என நிபந்­த­னை­க­ளின் அடிப்­ப­டை­யில், இந்த நிதியை வழங்க சர்­வ­தேச நாணய நிதி­யம் இணங்­கி­யி­ருந்­தது.

எரி­பொ­ருள் விலை சூத்­தி­ரம் மற்­றும் வரி சீர்த்­தி­ருத்­தங்­கள் அந்த நிபந்­த­னை­க­ளில் அடங்­கி­யி­ருந்­தன.