மைத்திரி – ரணில் – மஹிந்த ; ஆரம்பமாகியது முக்கிய கூட்டம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன தலைமையிலான பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்குபற்றுதலுடன்  சர்வ கட்சி சந்திப்பானது தற்போது ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமாகியுள்ளது.

 

பாராளுமன்றத்தில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற அரசியல் அமைதியின்மை மற்றும் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவந்து பாராளுமன்ற நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடனேயே இந்த சந்தப்பு ஆரம்பாகியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன தலைமையில் ஆரம்பாகியுள்ள இந்த சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் தற்போது கலந்து கொண்டுள்ளனர்.

எனினும் ஏற்கனவே அறிவித்ததற்கமைவாக மக்கள் விடுதலை முன்னணியினரும், சபாநாயகரும் இந்த சந்திப்பினை புறக்கணித்து கூட்டத்தில் கலந்து கொள்ள சமூகமளிக்கவில்ல‍ை என்பதும் குறிப்பிடத்தக்கது.