மஹிந்தவின் அரசாங்கம் செல்லுபடியற்றதாகும் – எரான்

அரசியலமைப்பிற்கு முரணாக சட்டரீதியற்ற முறையில் நியமிக்கப்பட்டுள்ள பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 122 வாக்குகளால் இரு தடவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன, மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தற்போது செல்லுபடியற்றதாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் அரசியலமைப்பின் கீழ் இயங்கும் பாராளுமன்றத்தினுள் அராஜகவாதிகள் போல் செயற்பட்டு பாராளுமன்ற சொத்துக்களை சேதப்படுத்தியும், சபாநாயகர் மற்றும் அவரது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள், ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

நாரஹேன்பிட்டவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.