பேஸ்புக் மெசஞ்சரில் புது வசதி

பேஸ்புக் மெசஞ்சரில் பயனர்கள் அதிக நேரத்தை செலவிட வைக்கும் நோக்கில் பேஸ்புக் புது அம்சத்தை வழங்க இருக்கிறது.

புது அம்சம் மெசஞ்சரின் கோட்பேஸ் மூலம் கண்டறியப்பட்டது. இதன் மூலம் ஒரே வீடியோவை பயனர் தனது நண்பருடன் ஒன்றிணைந்து பார்க்க முடியும். இதேபோன்று ஒரே வீடியோவை பற்றி சாட் செய்ய முடியும்.

மெசஞ்சரின் புது அம்சம் பேஸ்புக் நிறுவனத்திற்குள் சோதனை செய்யப்படுகிறது.

இந்த அம்சம் குறித்த முழு விவரங்கள் விரைவில் வெளியாகலாம் என தெரிகிறது.

வீடியோக்களை ஒன்றிணைந்து பார்க்கச் செய்வதன் மூலம், மெசஞ்சர் தளத்துக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வாய்ப்புகளும் அதிகம் ஆகும்.

வீடியோ பார்க்கும் சேவையில், விளம்பர வீடியோக்கள், திரைப்பட டிரெயிலர்கள் உள்ளிட்டவற்றை வழங்கலாம். தற்சமயம் வரை இந்த அம்சம் வெளியாவது குறித்து எவ்வித தகவலும் இல்லை