பாராளுமன்றம் கேலிப் பொருளாக மாறியமைக்கு சபாநாயகரே காரணம்”

இலங்கை அரசியல் வரலாற்றில் பாராளுமன்றத்தினை சர்வதேசத்தின் மத்தியில் சபநாயகர்  கரு ஜயசூரியவே கேலிப் பொருளாக மாற்றியமைத்து விட்டார் என குற்றம்சாட்டிய பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன, பாராளுமன்றத்தில் கலகம் அரசாங்க தரப்பினரால் ஏற்பட்டாலும் அதற்கு மூலக் காரணம் சபாநாயகரே எனவும் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் நாளை காலை பிரதமர் தலைமையில் இடம்பெறவுள்ள சந்திப்பின் பின்னரே பாராளுமன்றத்துக்கு சமூகமளிப்பதா அல்லது புறக்கணிப்பதா என்பது தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்துக்கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு   குறிப்பிட்டார்.