சர்வ கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வாரா ரணில்?

ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன இன்று அழைப்புவிடுத்துள்ள அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொள்ளவார் என ஐக்கியதேசிய கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ரணில் விக்கிரமசிங்க இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளும்பட்சத்தில் ஜனாதிபதிக்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் ஒக்டோபர் 26 ம் திகதிக்கு பின்னர் இடம்பெறும் முதலாவது சந்திப்பாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்றைய கூட்டத்தில் தமிழ் முற்போக்கு முன்னணி கலந்துகொள்ளும் என மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

தேசிய பிரச்சினைக்கு சுமூகதீர்வை காண்பதற்காக அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்துவது என்ற எங்கள் கொள்கைக்கு அமைய ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள இன்றைய சந்திப்பில் கலந்துகொள்வோம் என மனோகணேசன் தெரிவித்துள்ளார்.