சபாநாயகர் சர்வாதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் – வஜிர அபேவர்தன

நாட்டில் இக் கட்டான சூழ்நிலை உருவாகி 24 நாட்கள் ஆகியும் சபாநயகரின் அதிகாரங்களை முழுமையாக பயன்படுத்தாமல் இருப்பது கவலைக்குறியதாகும் எனத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, இந் நிலை நீடிக்குமானால் சபாநாயகர் சர்வாதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அலரி மாளிகையில் ஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியல் அமைப்புக்கு அமைய நாடு நெருக்கடி நிலையினை சந்தித்துள்ளது என சபாநாயகர் கருதுவாரானால், சபநாயகரக்குறிய அதிகாரங்களுடன் ஜனாதிபதியின் அதிகாரங்களையும் பிரயோகிப்பதற்கான அதிகாரம் சபாநாயகருக்கு வழங்கப்படுள்ளது.

மேலும் சட்டவிரோதமாக தெரிவு செய்யப்பட்டவரை சட்டவிரோதமாகவே பதவிநீக்க முடியும். அதன் பிரகாரமே சட்டத்துக்கு புறம்பாக தெரிவுசெய்யப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றார்.