இலியானாவின் இன்றைய நிலை

இடுப்பழகி இலியானா என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை இலியானா, மிகவும் குண்டாகி அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளதைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தெலுங்கு சினிமாவில் ஒரு காலக்கட்டத்தில் கொடிக்கட்டிப் பறந்தவர் நடிகர் இலியானா. தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இலியானா, தமிழிலும் விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்திருந்தார்.

அதற்குப் பிறகு ஹிந்திப் பட வாய்ப்புகள் அவருக்கு வந்தன. அங்கும் ஒரு சில வெற்றிப் படங்களைத் தந்த அவர், சமீபகாலமாக படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்து வந்தார். ஆண்ட்ரூ என்ற வெளிநாட்டவரை அவர் காதலித்து வந்ததாகவும், அவரை திருமணம் செய்து கொண்டதே அவர் படத்தில் நடிக்காததற்கு காரணமாக கூறப்பட்டது.

இந்நிலையில், அவர் நீண்ட இடைவெளிக்குப் பின் தெலுங்கில் நடிகர் ரவி தேஜாவுடன் ‘அமர் அக்பர் ஆண்டனி’ என்ற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இந்தப் படத்தின் நிகழ்ச்சி ஒன்றில், அவரைப் பார்த்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஒல்லியாக அழகாக இருந்த அவர், குண்டாக அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியதே அதற்கு காரணம். இதனிடையே, சமூக வலைத்தளங்களில் பல ரசிகர்களும் அவரைக் கிண்டல் செய்து வருகின்றனர்.