இரண்டாவது டெஸ்டிலும் இலங்கை தோல்வி

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 57 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 290 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 336 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் 46 ஓட்டங்கள் இலங்கை அணி முன்னிலை இருந்தது.

அதன்படி தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 346 ஓட்டங்களை பெற்றது.

அதன்படி இலங்கை அணிக்கு 301 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 243 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

துடுப்பெடுத்தாட்டத்தில் இலங்கை அணி சார்பில் எஞ்சலோ மெத்தியுஸ் 88 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் இங்கிலாந்த அணி சார்பில் ஜெக் லீட்ச் 5 விக்கெட்டுக்களையும், மெஹீன் அலி 4 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்றது.

முதலாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி 211 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.