ரணிலுக்கு ஆதரவாக சத்தியக் கடதாசி வழங்குவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கருத்து முரண்பாடு ஏற்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

ரணிலுக்கு ஆதரவாக சத்தியக் கடதாசி வழங்குவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கருத்து முரண்பாடு ஏற்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது

ஸ்ரீதரன் எம் பி, சாந்தி எம் பி, சார்ள்ஸ் எம் பி உட்பட தமிழரசு கட்சி உறுப்பினர்கள் சுமந்திரன் சம்பந்தன் தரப்போடு நேற்று கடுமையாக முரண்பட்டு இருக்கிறார்கள்

சித்தார்த்தன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் போன்ற பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மறுப்பால் இழுபறி அடைந்து இருக்கிறது நேற்றைய கூட்டம்

நேற்று மாலை ரணிலுடன் நடந்த சந்திப்பில் சிறிதரன் கலந்து கொள்ளவில்லை

கடந்த இரு வாரமாக ஜனநாயகத்திற்கு மட்டுமே ஆதரவு என்றும் UNP இற்கு ஆதரவு இல்லை என்றும் சுமந்திரன் தரப்பு கதை சொல்லி வந்தது .இப்போது மெல்ல மெல்ல ஆதரவு நிலையை வெளிக்காட்ட தொடக்கி இருக்கிறது .கடந்த பாதீடு விவாதத்தின் பொது முரண்பாடு எழுந்த போது ஒவ்வரு உறுப்பினர்களுக்கும் தொகுதி ரீதியாக 2 கோடி பெற்று கொடுத்து BUDGET வாக்களிக்க வைத்த சுமந்திரன் தரப்பு ரணிலுக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணையின் பொது 10 கோரிக்கை முன்வைக்க பட்டது என சொல்லி மற்ற உறுப்பினர்களை வாக்கு அளிக்க நிர்பந்தித்து இருந்தது .ஆனால் இந்த வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்ற படவில்லை .மாறாக கிராம எழுச்சி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டன

இப்போது மீண்டும் UNP க்கு ஆதரவளிக்க வேண்டிய சூழல் வந்து இருக்கிறது .இந்த தடவை சிறிதரன் போன்றவர்களிடம் சுமந்திரன் தரப்பு சத்திய கடதாசி கேட்கிறார்கள் .

உண்மையில் இந்த சூழ்நிலையை பயன்படுத்தி குறைந்த பட்சம் மக்களின் வாழ்வாதாரம் , வீட்டு திட்டம் , விவசாயம், பொருளாதார மீட்சி திட்டங்கள் , உட்கட்டுமான பிரச்சனைகள் , போன்ற பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகள் தொடக்கம் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு , காணாமல் போனோர் உறவுகளுக்கு நீதி , காணி விடுவிப்பு என சாதிக்க கூடிய விடயங்களை பெற்று கொள்ள முயற்சிக்க வேண்டும் . ரணில் வரும் JUNE மாதம் தேர்தல் என்கிறார் .இந்த குறுகிய காலத்தில் சாதிக்க கூடிய விடயங்களை பெற்று கொள்ள முடியும் .மக்களிடம் இந்த விடயங்களை தெளிவு படுத்தி Transparency யாக இதை செய்யலாம்

அதே போல மறுபுறம் இலங்கையின் அரசியல் மறுபுறம் நீதி கட்டமைப்பில் உள்நாட்டு விசாரணை சாத்தியமில்லை என்பதை அரசாங்கத்தின் நேச சக்திகளான மேற்குலகிடம் புரிய வைப்பதுடன் பகிரப்பட்ட இறைமை அடிப்படையில் சமஸ்டி கட்டமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் , ஒற்றையாட்சி ஏன் இலங்கைக்கு பொருந்தாது என்பதையும் தெளிவு படுத்த வேண்டும்

மகிந்த பலம் பெற்று பலவீனமான UNP சார்ந்து மத்திய அரசு அமைகிற பொது பூகோள அரசியலில் பலவீனமான அரசாங்கத்தை பாதுகாக்க எங்கள் கருத்துக்களுடன் உடன்பட மேற்குலகு முன்வரும் .இந்த அடிப்படையில் எங்களுக்கு இந்த காலம் சாதகமானது தான் ..

மகிந்த பலம் பெறுவது என்பது எதிர்க்கட்சியாக பலம் பெறுவதை மட்டுமே குறிக்கும் .மகிந்த அரசாங்கமாக எழுச்சி அடைந்தாள் சர்வதேச அரசாங்கங்கள் தங்கள் நலன் நோக்கி அவரை அகற்றும் வாய்ப்பு வரும் வரை மகிந்த ராஜபக்சேவை அனுசரித்து போகவே முயற்சிக்கும் .இது பாதகமானது

எனவே பலவீனமான UNP அரசாங்கத்தை ஆதரிப்பது தப்பில்லை .ஆனால் அரசாங்கத்திற்கு சொந்த நலனை முன் நிறுத்தி மக்கள் நலனை பின்தள்ளி எடுபிடி வேலை பார்ப்பது அசிங்கம்