சபாநாயகரே ஒழுக்கமற்ற வகையில் நடக்கும் போது எம்.பி.க்களிடம் எவ்வாறு எதிர்ப்பார்ப்பது ? – ரோஹித

நாட்டில் சபாநாயகர் என்பவர் மிகவும் கௌரவத்துக்குரியவராவார். ஆனால் கருஜயசூரிய போலியான ஆவனங்களை வைத்து ஜனாதிபதிக்கு கடிதமொன்றினை அனுப்பியுள்ளார். பாராளுமன்றத்தில் பிரதானமானவரான சபாநாயகரே இவ்வாறு செயற்படும் போது ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு ஒழுக்கத்தினை எதிர்பார்க்க முடியும்.

 

சபாநாயகரின் இந்த செயற்பாட்டுக்கு எதிராக நாம் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கும் தயாராகவே உள்ளோம்  என பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்தார்.

பத்தரமுல்ல – நெலும்மாவத்தையில் அமைந்துள்ள பொது ஜன பெரமுன காரியாலத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.