க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்

இவ்வருடத்திற்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளில் 95 வீதமானவர்களின் அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் முடிவடைந்துள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது வரை 3,95,000 அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்தார்.

இவற்றில் 3,92,000 அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலம் தெரிவித்துள்ளார்..

எனினும் இவ்வாறு விநியோகிக்கப்பட்ட அட்டைகளில் ஏதேனும் பிழைகள் இருப்பின் ஆற்பதிவு திணைக்களத்திற்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.