மகிந்தவின் கருத்தும் ஹர்சாவின் பதில்கருத்தும்

பாராளுமன்றத்தில் இன்று நிலவிய சூழ்நிலைக்கு சபாநாயகர் கருஜெயசூரியவே முக்கிய காரணம் என மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வ முகநூலில் இதனை பதிவு செய்துள்ளார்.

சபாநாயகரின் பக்கச்சார்பான நடவடிக்கையே பாராளுமன்றத்தில் இன்று பதற்றநிலை நிலவியமைக்கான முக்கிய காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

மக்களை மதிக்கும் ஸ்திரதன்மை வாய்ந்த  அரசாங்கமொன்று   அமைவதை உறுதி செய்வதற்காக பொதுத்தேர்தல் விரைவில் நடைபெறவேண்டும் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை மகிந்த ராஜபக்சவின் இந்த கருத்து குறித்து பதில்கருத்தை வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா பாராளுமன்றத்தில் உரிய வாக்கெடுப்பு இடம்பெறுவதற்கு அனுமதிக்காத மகிந்த ராஜபக்ச தரப்பிடமிருந்து சுதந்திரமான நீதியான தேர்தலை எதிர்பார்க்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.