சபாநாயகர் ஆசனத்திலிருந்து ஆளுந்தரப்பு ஆர்ப்பாட்டம்

பாராளுமன்றம் தற்போதுவரை உத்தியோகபூர்வமாக கூடாத  நிலையில் மகிந்தராஜபக்சவின் ஆதரவாளர்கள் சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்.

நேற்றைய அமளிதுமளியை தொடர்ந்து பாராளுமன்றம் இன்று கூடியுள்ள நிலையிலேயே  மகிந்த ராஜபக்ச தரப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாலித தேவரப்பெரும கைதுசெய்யவேண்டும் என கோரி மகிந்த ராஜபக்ச தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்துள்ளதையும் அவரைச்சுற்றி ஏனைய அனைவர்களும் கூடிநின்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.