கஜா புயலின் தாக்கம் தொடர்பில் வடமாகாண பாடசாலைகளிற்கு இன்று விசேட விடுமுறை!

கஜா புயலின் தாக்கம் தொடர்பில் வடமாகாண பாடசாலைகளிற்கு இன்று விசேட விடுமுறை!

கஜா புயலின் தாக்கம் தொடர்பில் வடமாகாண பாடசாலைகளிற்கு இன்று விசேட விடுமுறை வழங்கப்பட்டது.

அதை அடுத்து இன்று காலை 9 மணியிலிருந்து பாடசாலை மாணவர்கள் வீடுகளிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர் பாடசாலை விடுமுறை தொடர்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்படாத நிலையில் பாடசாலைக்கு மாணவர்கள் வழமைபோன்று சென்றனர்.

பாடசாலை ஆரம்பித்து சில மணிநேரங்களில் கிடைத்த அறிவுறுத்தலிற்கமைய பாடசாலை மாணவர்கள் வீடுகளிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்த செயற்பாட்டினால் பெரும் சிரமங்களை மாணவர்கள் எதிர்கொண்டனர்.

இவ்விடயம் தொடர்பில் பெற்றோர் கருத்து தெரிவிக்கையில், இவ்வாறான அனர்த்தம் தொடர்பில் ஏற்கனவே வெளியாகியிருநத்த நிலையில்,

இன்று திடீரென பாடசாலைகளிற்கு விடுமுறை வழங்கியமை பல சிரமங்களை ஏற்படுத்தி உள்ளதாகவும், அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்டடோர் இவ்வாறான சிரமங்களிற்கு முகம் கொடுத்தள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு அறிவுறுத்தல் கிடைத்ததும் பாடசாலை சமூகமும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அசமந்தபோக்கான செயற்பாட்டில் இருந்துள்ளமை தொடர்பில் பெற்றோர் விசனம் தெரிவிக்கின்றனர்