எல்லாம் தெரியும் படி ஆடை அணிந்து ஆட சொன்னான்’

ஒளிவு மறைவில்லாமல் பேசும் நடிகை ராதிகா ஆப்தே தனியார் தொலைக்காட்சியின் டாக் ஷோவில் பங்கேற்றார். அதில் தமிழ் சினிமாவில் அவருக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து பேசினார்.

அவர் கூறுகையில், ‘சில வருடங்களுக்கு முன் லண்டனில் இருந்து திரும்பினேன். மும்பை குப்பை லாட்ஜில் ரூம் போட்ட தமிழ் இயக்குனர், என்னை ஆடிஷனுக்கு வரச் சொன்னார்.

கதாநாயகன் விக்ரமை வைத்து பிரம்மாண்ட சரித்திரப்படம் என்றும் கூறினான். அவன் பெயர் நினைவில் இல்லை. அறையில் ஒரு பத்துப்பேர் இருந்தார்கள். பீரியட் படம் என ப்ளவுஸ் என்ற பெயரில் எல்லாம் தெரியும் அளவு ஒன்றைக்கொடுத்தார்கள்.

டைரக்டரும் குழுவினரும் மட்டமான உடைகள் அணிந்த டான்ஸ் ஆடச் சொல்லிக்கொடுத்தபடி போட்டோ எடுத்துத்தார்கள். பின் அவர்கள் மட்டமான ஆசாமிகள் என புரிந்துகொண்டேன்.

அவர்களின் தவறான நோக்கம் புரிந்ததும் இரவு தங்கமுடியாது என தப்பி ஓடிவந்தேன். அப்படி ஒரு படம் நடக்கவே இல்லை. அவர்கள் எடுத்த புகைப்படங்கள் என்ன ஆனது என தெரியவில்லை. சில மாதங்களுக்கு முன் வெளியான என் ஆபாசப்படங்கள் அவர்கள் எடுத்ததாகக்கூட இருக்கலாம்.’ என்றார்.