யாழில் கோர விபத்து! சம்பவ இடத்திலேயே ஒருவர் பரிதாபமாக பலி

அரியாலை – நெளுக்குளம் பகுதியில் புகையிரதத்துடன் காரொன்று மோதியதில் காரில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கடுகதி புகையிரதத்துடனேயே குறித்த கார் மோதியுள்ளது.

இதன்போது காரில் பயணித்த நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அரியாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.