முதலாம் உலகப்போர் நினைவுநாளில் கனேடிய மூதாடிக்கு 100 வயது!

முதலாம் உலகப்போர் நிறைவடைந்த தினத்தின் பிறந்த கனேடிய பெண்ணொருவர் (ஞாயிற்றுக்கிழமை) 100ஆவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.

ஒட்டாவா – மொன்ரீயலைச் சேர்ந்த கியோவானா ரெவெண்டா மன்சினி என்ற குறித்த பெண், கடந்த 1918ஆம் ஆண்டு உலகப் போர் முடிவுறுத்தப்பட்ட அதே நாளில் அதே நேரத்தில் பிறந்துள்ளார்.

உலகப் போரை முடிவுறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நேரத்தில் தான் பிறந்ததாக கியோவானா ரெவெண்டா மன்சினி நெகிழ்ச்சியுடன் கூறுகின்றார்.

முதலாம் உலகப் போரின் 100 வருட நினைவுதினம் உலகம் முழுவதும் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அந்தவகையில், மொன்ரீயலில் இன்று நடைபெறும் நிகழ்வுக்கு கியோவானா ரெவெண்டா மன்சினி அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த வருடமும் அவர் உலகப் போர் நினைவுதினத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை, தனது பிறந்தநாளுக்கு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, இரண்டாம் எலிசபெத் மகாராணி மற்றும் பாப்பரசர் பிரான்சிஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளதாக மன்சினி மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.