மஹிந்தவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! இரா. சம்பந்தன் வெளியிட்ட செய்தி

மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை மஹிந்தவுக்கு எதிராக ஜே.வி.பியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை இவர் உறுதி செய்துள்ளார்.

ஜே.வி.பியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் 122 பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் அஜித் பெரேரா மற்றும் லக்ஸ்மன் கிரியெல்லவும் இதனை உறுதிசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.