மகிந்தவை பலி கொடுத்த மைத்திரி

மஹிந்த ராஜபக்‌ஷ, சில சதிகாரர்களின் வலைகளில் சிக்கிக்கொண்டார் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிட வேண்டுமென்ற எண்ணத்தில்  மஹிந்த ராஜபக்‌ஷவை பலிகொடுத்துள்ளார் என்றும்  மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார ​திசாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் ஊடகவியலாளர் மத்தியில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.