பெரும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் விக்கினேஸ்வரனுடன் களமிறங்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்?

ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்புகள் காரணமாக கடந்த சில வாரங்களாக இலங்கையில் பரபரப்பான ஒரு அரசியல் சூழல் நிலவி வருகின்றது.

தமிழ் மக்கள் பெரும் அரசியல் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் இக்காலகட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இணைந்து ஒரு பலமான கூட்டணியை உருவாக்குவதற்கான வாய்ப்புக்கள் பெரிதும் கணிந்துவிட்டதாக நம்பகமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது.பொதுவான தேர்தல் சின்னத்தின் கீழ் வடக்கு, கிழக்கு முழுவதும் போட்டியிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பலம்வாய்ந்த கூட்டணி அமைவதான செய்தி தமிழ்மக்களின் காதுகளில் தேனை வார்ப்பதாக அமையும் என்று தாயகத்தில் இருந்து அரசியல் முக்கியஸ்த்தர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இத்தகைய சூழ்நிலையைக் கண்டு முதலமைச்சரும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்திருப்பதாகவும் தெரியவருகிறது.மேலும், விரைவில் புதிய ஒரு நல்ல மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்று யாழ். வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளது.